Thursday, March 22, 2018

ஈரோடு மண்டல மாநாடு

தாடிக் கிழவன் 
கண்டது தான்
திராவிடக் கழகம் 

திராவிடக் கிழவன் 
பிறந்த மண்தான் 
இந்த நிலம் 

பெரியார் என்று 
பேராச்சு 
ஈரோடு என்பது 
ஊராச்சு 

பெரியார் பிறந்த.
இந்த மண்ணில் 

நடக்குது 
  மண்டலம் மாநாடு 

இது

திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு 
சொந்தமான. தொரு 
தாய்வீடு 

இங்கே விதைக்கும் 
சொற்கள் நெற்கள் 
அறுவடை செய்யும் 
அன்னாளே 

தமிழகத்தில்
தன்னிகரற்ற.
திமுகாவின்  

ஆட்சி மலரும்  
நன்நாளே 

காணக் கண்கோடி போதாது 

கழகத்துக்
கண்மணிகள் 
அணி திரளும் போது

காணும் இடமெல்லாம் 
மக்கள் வெள்ளம்

காடும் மேடும் 
வீடும் நாடும் 
கூடிக் கூடிக்
 கலந்ததுரையாடு 

இனம் மானம்
காக்கும் தலைவர்கள் 
போர்முரசாக முழங்கும்
முழக்கங்கள் 

செவிப்பாறையில் 
செதுக்கி வைக்கும் 
செந்தமிழில் 
சிந்தனைச் சொற்கள் 

தேனைச் சேகரிக்கும் 
தேனீக்கள் போல
வாக்குகளைச் சேகரித்து
வழங்குவோம் வாரீர் 

தளபதியின் கரம் 
வலுப்பெரும் 
தமிழர்களின் மானம் 
தலை நிமிரும் 

அணிதிரண்டு வாரீர் 
அலைகடல் என வாரீர் 
ஆர்ப்பரித்து வாரீர் 
ஆர்வம் நிறைந்து வாரீர்

                        திருப்பூர் 
                      தம்பிதுரை
                    அமைப்பாளர் 
                கொங்கு நகர் பகுதி       விவசாயத்தொழிலாளர.அணி                       ....      திருப்பூர்

Tuesday, March 13, 2018

அமுதம்

பாறையில்  விழுகின்ற
பாலில் ஒரு துளி 

பசியால் அழுகும் 
பச்சிளம் பாலகனின் 

வாயில் விழுந்தால்
வறுமை ஒழியும் 

பசியில் துடிக்கும் 
குழந்தைகளின் 
வயிறுகள் நிறையும் 

குடிக்கும் பாலைக் 
குடம் குடமாக

கல்லில் ஊற்றி அதை
  சேறாக மாற்றி 

சாக்கடைக்கு செல்லும் 
கழிவுப் பொருளாக.

மாற்றம் பெறுகின்றது 
மடி சுரந்த பால். 

அமுதம் என்பதை 
யாரும் கண்டதில்லை 

நாம் வாழும் உலகில் 
உயிர் வாழும் வகையில்

பசியைப் போக்கும் 
உயிரைக் காக்கும் 

உண்மையான அமுதம் 
உணவுப் பால் தான் 

இதை உணராத
ஜென்மங்கள் 
உலகில் இருப்பது
உண்மையில் வீன்தான்
          தம்பிதுரை....

Friday, March 9, 2018

மகளிர் தினம்

ஒ 

பெண்ணே 
நான் பிறந்தது முதல் 
இன்று வரை 

என்னுடன்
தாயாக.
சகோதரியாக
தோழியாக.
காதலியாக. 
மனைவியாக.
மகளாக.
பேத்தியாக.
பாட்டியாகவும் 

உறவுகளிலும் 
நட்புகளிலும் 
தொடர்ந்து
பயனித்துவரும் 

நீ இன்றி நான் 
இல்லை 
என்ற நிலையில்

ஒருநாள் மட்டும் 
வாழ்த்துச் சொல்லி 

உன்னை 
பிரித்துப் பார்க்க. 
மனமில்லை 

ஆண்டுமுழுவதும் 
என் மனதில்  
அன்பாலே  
மலர்ந்திருக்கும் 
பூமகள் நீ 

நீ  பெண்ணல்ல.
எந்த உறவில் 
இருந்தாலும் 
  நீ தேவதை
         தம்பிதுரை ......

Saturday, March 3, 2018

பார்வை

தூரத்திலிருந்து 
நான் பார்த்தேன் 

துடிக்கும் இளமையில் 
நின்றாள் இளம் மயில் 

தோழன் தோலில் 
சாய்ந்திருந்தேன் 
தோழிகளோடு 
பவனி வந்தாள் 

கண்களைப் 
பார்த்ததும் 
எண்ணங்கள்
அனைத்தும் 

சிற்றெறும்பு போல
சுரு சுருப்பாயின

மின்னலைப் போல.
சிரிப்பு ஒன்று
இதழுக்குள்ளே 
வந்து போயின. 

பட்டாம்பூச்சி  
இமைகளாய் மாறி 
மெல்ல மெல்லவே
மூடித் திறந்தன.

இதழில் பூத்த.
புன்னகை பூக்கள் 
இதயம் வரையில் 
சென்று மணந்தன.

கண்ணில் இருந்த.
காந்த அம்புகள் 
கண்ணைச் 
சிமிட்டினாள் 
பாய்ந்து வந்தன.

பார்க்கவேண்டிய.
விழிகள் இரண்டும் 
பரவசத்தில் 
துள்ளிக் குதித்தன.
 
கண்களைச் சிமிட்டி 
இமைகள் வெட்டும் 
கண்ணியின் 
கண்ணின்  
வெட்டைக் கண்டு 

வானைக் கிழித்து 
மேகம் தாண்டும்
  மின்னல் கீற்று 
தோற்றுப் போயின.

ஜன்னல் காற்றுகள் 
வீசியும் கூட.
ஆனந்தத்தில் முகம் 
வேர்த்துப் போயின.

கண்ணியின் 
கடைக்கண் 
ஜாடையிலே 

இளம்
காளையர்   வீழ்வது 
இந்தப் பார்வையிலே 

            .தம்பிதுரை.....

அழகு

அழகு

அழகு என்பது  
உன் புன்னகையில் 
இருக்கிறது

நீ புன்னகையில் 
பூக்கும்போது 

என் உள்ளமது 
பூரிக்கின்றது 

சூரியன் போல் 
உன் கண்கள் 
சுடர்விட்டுச் 
சிரிக்கின்றது 

இதழ்கள் திறந்து 
பற்கள் 
பளிச்சிடும் போது 

சிப்பி திறந்து 
முத்துக்களாய் 
ஜொலிக்கின்றது 

உன் பூரிப்பில்
கன்னமிரண்டும் 
தாமரை போல் 
மலர்கின்றது 

சிரித்துக்கொண்டே  நீ
நடக்கும்போது 

ஓர் நந்தவனமே 
நகர்வதுபோல உள்ளது 

மகிழ்ச்சி 
என்ற ஒன்று 

உன் மனதுக்குள்
இல்லையென்றால் 

பூரிப்பு என்ற பூ 
உன் முகத்திலே பூக்காது 

மகிழ்ச்சியும் பூரிப்பும் 
  வற்றாமல் குறையாமல் 
வாழ்நாள் முழுவதும் 
வரவேண்டும் உன்னோடு 

வரவேண்டும் 
வளரவேண்டும் என.
வாழ்த்துகிறேன் 
அன்போடு
             தம்பிதுரை .....


Friday, February 23, 2018

சுமை

பள்ளிக்குச் சென்றேன்
முதன்முதலாக.
கல்விகள் கற்க
புத்தகம் சுமந்தேன்

பருவம் அடைந்ததும் 
.படிப்பை இழந்தேன் 
ஆண்பிள்ளை  தோழன்
பழகுவான் என்ற
  பலியைச் சுமந்தேன்

கட்டிய கணவன் 
கட்டிலின் மேலே 
காதலினாலே 
கனவைச் சுமந்தேன் 

சுமந்தவன் சுமையல்ல.
சுமப்பதும் சுகமுண்டு 
கர்பம் தரித்து மடியினில் 
கருவைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
வறுமையினாலே
தோலில் விழுந்தது 
குடும்பத்தைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
பெற்ற பிள்ளைகள் 
கைவிட்டதாலே 
பசியைச் சுமந்தேன் 

சுமப்பதுதான் 
சுகமென்று
நினைத்து

சுடுகாடு 
போகின்றவரை 
நிழைத்து 

உழைத்துப் 
பிழைத்திடவே
தோலின் மேலே
பாரம் ஏற்றி

சுமைகளையே 
சுமக்கின்றேன் 

சுமை கூலியை 
வாங்கிடுவேனா

சுமை தாங்காமல் 
வீழ்ந்திடுவேனா 

சுமக்கவைக்கும்
எம் மக்களே 

என்னைச்  சுட்டெரிக்க
வைத்துக் கொள்ளுங்கள் 
நான் சுமக்கும் 
இந்த சுள்ளிச் 
சுமைகளையே 

சுமையான.
மனதுடன் 

தம்பிதுரை ......

Wednesday, February 21, 2018

மாணவர்கள்

மாணவர்கள்

யானையின் பலம் 
கொண்டவர்கள் 

தன் பலம் 
என்ன என்பதை 
யானையைப் போல
உணராதவர்கள் 

மாணவர்கள் 
கூறிய போர்வாள்கள் 
வெட்டிச் சாய்க்கும் 
திறன் இருந்தும் 
வெட்டத் தெரியாதவன் 
கைகளிலே 
வீனாகப் போகின்றார்கள்

அவனுக்குள் இருக்கும் 
அறிவு ஆற்றல் 
அடங்காத காட்டாறாய் 
பெருக்கெடுக்கும் 
நீர் ஊற்றாய் 

மாணவர்கள் 
வானத்திலிருந்து
பொழிகின்ற.
மழைத்துளிகள் 

கங்கையிலோ 
காவேரியிலோ 
இவர்கள் விழாமல் 

சில நேரம் சில பேர்கள்
சாக்கடையில் 
விழுந்துவிடுகிறார்கள்

மாணவர்கள் 
வைரமாகவோ 
மாணிக்கம் ஆகவோ 

விலைமதிக்க முடியாத.
அலங்காரப் பொருளாக இருக்கவேண்டும் என.
எண்ணாதீர்கள் 

அவன்
அனைத்தையும் 
சுட்டு எரிக்கும் 
நெருப்பைப் போன்றவன்

மாணவர்கள் வீரியம்
மற்றவர்களால்  
மட்டம் தட்டப்படுகிறது 

உண்மையில் 
மாணவர்கள் 
அவர்களின் 
வாழ்க்கையை
அவர்கள் 
வாழவேயில்லை 

பெற்றோர்கள் பெரியோர்கள் கற்றோவர்கள் மற்றவர்கள்
இவர்களின் கற்பனைக்கு
செயல்வடிவம் தருகின்றான்

வெற்றிகளைத் 
தனதென்று 
இவர்கள் 
பரித்துக் கொள்வார்கள்

தோல்விகளை 
இவனது தோலில்
தொங்கவிடுவார்கள் 

சரியான.
பாதையைக்  காட்டிவிட்டால் நினைத்ததை நடத்துவார்கள்

மாணவர்கள் 
வைரமானவர்கள் அல்ல

மாணவர்கள்
வைராக்கியம் ஆனவர்கள்

தீண்டும் வரை 
அவர்கள் இங்கே 

வெறும் திரியாகத்தான் 
தெரிவார்கள்

தீண்டி விட்டால் 
அன்றே தெரியும் 
அவர்கள்  திரியல்ல.
உலகையே சுட்டெரிக்கும்

சூரியனின்
தீப்பொறிகள் என்று

சுடு தனியாத
தம்பிதுரை

Tuesday, February 20, 2018

பட்டுப்போன மரம்

ஏய்
பட்டுப்போன மரமே

உன்னை
விட்டுப்போன உறவால்
காய்ந்து சுறுங்கி
தனிமையில்
வெறுமையில்
தவிக்கின்றாய்

நீ பசுமையாய்
இருக்கும்போது
உன் இடத்தில்
உன் நிழலில்
இளைப்பாரியவர்கள்

உன் காய் கனிகளை
சுவைத்தவர்கள்

உன் காற்றை
சுவாசித்தவர்கள்

உன்னை விட்டு
விலகியதால்
நீ பட்டுப் போனாயா

நீ பட்டுப் போனதால்
உன்னை விட்டு
விலகிப் போனார்களா

உனக்கு மட்டும்
இந்த நிலையில்லை

சில வீட்டுக் கிழத்துக்கும்
இந்த நிலைதான்

இருவருமே
எரிவதற்க்காக
காத்து நிற்கின்றீர்கள்

உன்னை
எரிப்பதற்காகவே 

பார்த்திருப்பவர்கள்

வீட்டில் உள்ள கிழம்
எப்போது எரிப்போம் எனக்    காத்திருக்கிறார்கள்

இன்று நீ நாளை நான்
என்பதை மறந்த உலகம்

         தம்பிதுரை


Monday, February 19, 2018

கவிஞன்

பொய் சொல்வது
தவறு என்று
போதித்தாள்
என் அன்னை

ஒழுக்கம் எனக்குள்
வரவேண்டும் என்று

பொய் சொல்வது
தவறில்லை

பொய் 
சொல்பவர்கள் தான் 
  பொருளும் புகழும் 
சேர்தனர்

போட்டுடைத்தார் 
  என் தந்தை

என்னப்பா 
சொல்கிறீர்கள் 
வியப்போடு கேட்டேன்
விபரத்தைச் சொன்னார்

கம்பன் 
காளிதாசன் முதல் 

கண்ணதாசன் 
வாலி தாண்டி 
வைரமுத்து வரை

பொய் 
சொல்லித்தான்
பொருளும் புகழும் 
சேர்த்னர்

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து
புலவர் பெருமான் என்கிறார்

கண்ணுக்கு 
மை அழகு
கவிதைக்கு 
பொய் அழகு

ஒரு பொய்யாவது
சொல் கண்ணே

உன் காதலன்
நான் தான் என்று

அந்தப் பொய்யில்
உயிர் வாழ்வேன்

ஆகவே
பொய் சொல்வது
தவறில்லை என்றார்

நானும் யோசித்தேன்
நானும் முயற்சித்தேன்

சாதாரணப்
பெண்ணைப் பார்த்து
மானே மீனே
மயிலே குயிலே என்றேன்

நம்பிவிட்டார்கள் இந்தப் பெண்பிள்ளைகள்

நானும் புறப்பட்டேன்
பொய் சொல்லவதற்கு
        தம்பிதுரை

Monday, January 29, 2018

நம் சொந்தம்

நம் ரத்த சொந்தங்கள் 
நமது பிள்ளைகள்

நம் பிள்ளைகளின்
பிள்ளைகள்
நம் பிள்ளையின்
பேரப்பிள்ளைகள்

என எத்தனையோ பேர்கள்

நமக்கு இருந்தும்   

இருந்தும் இல்லாமல் 
இருக்கின்றோம்  


இந்த உலகில் இருந்தும் 
தனியாக தவிக்கிறோம் 

உன் உயிருக்கு ஏதேனும் 
நோய்நொடிகள் வந்திடுமோ  

என் உயிருக்கு ஏதேனும் 
ஆபத்துகள் வந்திடுமோ என.

எத்தனை காலங்கள் நாம் 
இருவரும் பயந்து  

இளமை காலத்தில் 
ஒன்றாக இணைந்து
வாழ்ந்திருப்போம்  

எப்போது இருளும் 
எப்போது விடியும்  என

எதிர்பார்த்த காலங்கள்
எல்லாமே மாறிப்போய் 

எதற்காக இருள்கிறது
எதற்க்காக விடிகிறது  

என்பது கூடத் தெரியாமல் 
எல்லாக் காலங்களுமே
நமக்கு இப்போது 
ஒன்றாகத்தானே தெரிகிறது 

இன்று 

ஓர் தாயும் மகனும் போல
ஓர் தந்தையும் மகளும் போல.
நம் உறவு மாறிப்போனதே 

எத்தனை எதிர்ப்பு 
எத்தனை பிரச்சினைகள் 
எத்தனை கருத்து வேறுபாடுகள் எதற்கும் இடம் கொடுக்காமல்

இணைந்து நாம்
வாழ்ந்ததினாலே 

இன்றளவும் நாம் 
உயிர் வாழ்கிறோம் 
யார் துணையும் 
இல்லாமலே

இதுவே 

இயற்கை நம்மைப்
பிரிக்காமல் 
இணையாக
அழைத்துக்கொண்டால் 

அதுவே 

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பிற்கு கிடைக்கும் 

வெகுமதியாகும்

கணவன் மனைவியின்  
காதலுக்கு கிடைத்த 

வெற்றியாகும்

தம்பிதுரை