பொய் சொல்வது
தவறு என்று
போதித்தாள்
என் அன்னை
ஒழுக்கம் எனக்குள்
வரவேண்டும் என்று
பொய் சொல்வது
தவறில்லை
பொய்
சொல்பவர்கள் தான்
பொருளும் புகழும்
சேர்தனர்
போட்டுடைத்தார்
என் தந்தை
என்னப்பா
சொல்கிறீர்கள்
வியப்போடு கேட்டேன்
விபரத்தைச் சொன்னார்
கம்பன்
காளிதாசன் முதல்
கண்ணதாசன்
வாலி தாண்டி
வைரமுத்து வரை
பொய்
சொல்லித்தான்
பொருளும் புகழும்
சேர்த்னர்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து
புலவர் பெருமான் என்கிறார்
கண்ணுக்கு
மை அழகு
கவிதைக்கு
பொய் அழகு
ஒரு பொய்யாவது
சொல் கண்ணே
உன் காதலன்
நான் தான் என்று
அந்தப் பொய்யில்
உயிர் வாழ்வேன்
ஆகவே
பொய் சொல்வது
தவறில்லை என்றார்
நானும் யோசித்தேன்
நானும் முயற்சித்தேன்
சாதாரணப்
பெண்ணைப் பார்த்து
மானே மீனே
மயிலே குயிலே என்றேன்
நம்பிவிட்டார்கள் இந்தப் பெண்பிள்ளைகள்
நானும் புறப்பட்டேன்
பொய் சொல்லவதற்கு
தம்பிதுரை
No comments:
Post a Comment