Friday, February 23, 2018

சுமை

பள்ளிக்குச் சென்றேன்
முதன்முதலாக.
கல்விகள் கற்க
புத்தகம் சுமந்தேன்

பருவம் அடைந்ததும் 
.படிப்பை இழந்தேன் 
ஆண்பிள்ளை  தோழன்
பழகுவான் என்ற
  பலியைச் சுமந்தேன்

கட்டிய கணவன் 
கட்டிலின் மேலே 
காதலினாலே 
கனவைச் சுமந்தேன் 

சுமந்தவன் சுமையல்ல.
சுமப்பதும் சுகமுண்டு 
கர்பம் தரித்து மடியினில் 
கருவைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
வறுமையினாலே
தோலில் விழுந்தது 
குடும்பத்தைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
பெற்ற பிள்ளைகள் 
கைவிட்டதாலே 
பசியைச் சுமந்தேன் 

சுமப்பதுதான் 
சுகமென்று
நினைத்து

சுடுகாடு 
போகின்றவரை 
நிழைத்து 

உழைத்துப் 
பிழைத்திடவே
தோலின் மேலே
பாரம் ஏற்றி

சுமைகளையே 
சுமக்கின்றேன் 

சுமை கூலியை 
வாங்கிடுவேனா

சுமை தாங்காமல் 
வீழ்ந்திடுவேனா 

சுமக்கவைக்கும்
எம் மக்களே 

என்னைச்  சுட்டெரிக்க
வைத்துக் கொள்ளுங்கள் 
நான் சுமக்கும் 
இந்த சுள்ளிச் 
சுமைகளையே 

சுமையான.
மனதுடன் 

தம்பிதுரை ......

No comments:

Post a Comment