ஏய்
பட்டுப்போன மரமே
உன்னை
விட்டுப்போன உறவால்
காய்ந்து சுறுங்கி
தனிமையில்
வெறுமையில்
தவிக்கின்றாய்
நீ பசுமையாய்
இருக்கும்போது
உன் இடத்தில்
உன் நிழலில்
இளைப்பாரியவர்கள்
உன் காய் கனிகளை
சுவைத்தவர்கள்
உன் காற்றை
சுவாசித்தவர்கள்
உன்னை விட்டு
விலகியதால்
நீ பட்டுப் போனாயா
நீ பட்டுப் போனதால்
உன்னை விட்டு
விலகிப் போனார்களா
உனக்கு மட்டும்
இந்த நிலையில்லை
சில வீட்டுக் கிழத்துக்கும்
இந்த நிலைதான்
இருவருமே
எரிவதற்க்காக
காத்து நிற்கின்றீர்கள்
உன்னை
எரிப்பதற்காகவே
பார்த்திருப்பவர்கள்
வீட்டில் உள்ள கிழம்
எப்போது எரிப்போம் எனக் காத்திருக்கிறார்கள்
இன்று நீ நாளை நான்
என்பதை மறந்த உலகம்
தம்பிதுரை
No comments:
Post a Comment