Sunday, November 26, 2017

என் மகள்

என் மகள்
மடியில் விதையாக
விழும்போதே 
மனதில் பல
கனவுகளை தந்தாள்

மனதுக்குள்
பல உருவங்கள் தந்து 
மகிழ்ச்சியைத் தந்தாள்

மலரின் மொட்டுபோல
மெல்ல. மலர்ந்தாள்

மனம் எங்கும் மணம் வீசி
மனதுக்குள் நிறைந்தாள்

மையிருட்டாய்
இருந்த என் வாழ்வில்

இருளை அழிக்கும்
  இளங்கதிராக. உதித்தாள்

முழுமதியான அவள்
முகம் பார்த்து

இயற்கை நமக்களித்த
வெகுமதியென மகிழ்ந்தேன்

உள்ளத்தில்
ஓர் படபடப்பு

உயிருக்குள்ளே
இன்னொரு
உயிர் துடிப்பு

முதல் முதலில்
என் கைகளில்
மலர்கொடிபோல் அவள்
தவழும்போது

முத்து முத்தாக
கண்ணீர் துளிகள்

மொத்த மகிழ்ச்சியையும்
மிச்சமின்றிக் கொட்டியது

தென்றல்
தேனிசை பாடியது
நதிகள் நாட்டியமாடியது

நீலவானில்
வெண்மேகம்
ஊர்வலமாய் போகின்றது

நம்மாலும்
முடிகின்றது
ஒரு தேவதையை
படைப்பதற்கு

நம் வாழ்விலும்
கிடைக்கிறது 
பெரும் புதையலைவிட
ஓர் பெண் குழந்தை நமக்கு

என்மகள்
எனக்குக் கிடைத்த
அந்த தினம்

இயற்கை
எனக்களித்த
மிகப் பெரிய வரம்
              ..... தம்பிதுரை .......

Thursday, October 26, 2017

பேரன்

நெஞ்சில் மிதித்து
முகத்தில் உதைத்தும் கோபம் வராமல்
புன்னகை பூக்கவைத்த
புது உறவு பேரன்

அறிதலும் புரிதலும்
அதிகம் பெற்றவன்
கற்றவனுக்கு நிகராக
வித்தைகள் கற்றவன்

சொல்வதைக்
கேட்டு செய்வது
ஓர் அறிவு

செய்வதைப்
பார்த்துச் செய்வது
ஓர் அறிவு

ஒரு வயதில் 

இந்த அறிவு 

உண்மையில் பேரறிவு 

அடித்து உடைத்து
நொறுக்கிய பொருள்

 ஏராளம்

அசையா பொருள்களும்  
அசைந்தது அவனிடம்

இன்று
அசையும் பொருள்களும்

அசையும் உயிர்களும் கூட.

அசைவின்றி கிடக்குது
அவனின்றி வெற்றிடமாக

குவிந்த.உதடுகள்
கூறிய பார்வை
நீட்டும் விரல்கள்
சத்தமிட்ட குரல்

எல்லாம் இழந்து
வெறிச் சோடிப்போனது
எனது வீடு

கண்ணுக்குள் ஈரமானது 

நெஞ்சுக்குள் பாரமானது
                    தம்பிதுரை ...


Sunday, May 21, 2017

பெண் குழந்தை

பெண் குழந்தை

ஒருவன்
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் சொல்லுபவள்

வாழ்கின்ற வாழ்க்கையையே அர்த்தமாக்குபவள்

வசந்தத்தை நமக்குள்ளே வரவழைப்பவள்

பெண் குழந்தை
இல்லாத வீடு.
ஓர் பொட்டல் காடு

பருவத்தில்
மழை பொழிந்தால்
சிறு இலை தலைகளை
காணலாம்

பெண் குழந்தை
இருக்கும் வீடு
.அது பசுமை நிறைந்த
நந்தவனம்

பூக்கள் சிரிக்கும்
பூங்காவனம்

சோம்பேறியான
மனிதனைக்கூட
உழைக்கவைக்கும்
எந்திரம்

சோர்வடைந்து
மனம் தளர்ந்தால்

புத்துணர்வு பொங்கிவர. நீ
உச்சரிக்கும் மந்திரம்

தாய்க்கும் தந்தைக்கும்
நேசம் இனைப்பவள்

தாயோடும் தந்தையோடும்
பாசம் மிகுந்தவள்

முரட்டுத்தனமான
மனிதைக்கூட

மென்மையாக
மாற்றுபவள்

முள்ளையும்
மலர வைப்பவள்

பெண் குழந்தை
உள்ள வீடு .
ஓர் சிறு கோவில்

வெள்ளிக் கொலுசுகள்
அணிந்த கலைமகள்
ஓடியாடி
விளையாடும் திருமகள்

சந்தனம் மணக்கும்
மஞ்சள் மணக்கும்
மங்களகரமாக
வீடேயிருக்கும்

பண்டிகை என்று
வந்துவிட்டால்
வீட்டில் எங்கும் 
தீப ஒளிதான்

பெண் பிள்ளை
இருக்கும் வீட்டில்
நாள்தோறுமே
தீபாவளி தான்

மனம் தளர்ந்து
அமைதியிலக்கும்
வேளையிலே

மகள் முகம்
பார்த்து விட்டால்
புத்துணர்வு
பொங்கிவரும்
வாழ்வினிலே

நாத ஒலி
சலங்கை ஒலி
மங்களவாத்தியம்
இன்னிசை யாவும்

மகளின் இதழ் திறந்து
குயிலின் குரல் கலந்து
குழலின் இனிமையாக

அப்பா என்று
அழைக்கும்போது
அனைத்து இசையும்
காணாமல் போகும்

நாம் பிறந்த பிறவியின்
முழுப்பயனாக மாறும்

எத்தனை வறுமையில்
நான் இருந்தாலும்

எத்தனை செல்வம்
நான் பெற்றிருந்தாலும்

எனக்காக தனக்காக
கடைசி சொட்டு
கண்ணீர் சிந்தும்
என் பிள்ளை

அவளே பெண்பிள்ளை

பெண்பிள்ளை
பாசத்தின்
பெருமை கொள்ளும்
ஓர் தகப்பன்     ..தம்பிதுரை.......

Friday, May 5, 2017

தாய்

நான் பிறந்த போது
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

சிறுமியாக
சுற்றித் திரிந்ததும்

தாய் தந்தை
தோளில் தவழ்ந்ததும்

ஓடியாடி
விளையாடிய போதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

இனிப்புப் புளிப்பு
காரங்களை
சுவைத்தபோதும்

எத்தனயோ பழங்கள்
காய்கள் கடித்தபோதும்

இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

பள்ளியிலே
படித்த போதும்
பருவம் அடைந்த போதும்

ஆண் துனை
கிடைத்தபோதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

உணவுக்கு
வழியில்லை
என்னை வறுமையும்
விடவில்லை

உழைக்கவும்
பயமில்லை
வயிற்றிலே
வளருது பிள்ளை

முன்னூறு நாள்
சுமந்தேன்
எத்தனையோ
இன்னல்களை
இடைவிடாது கடந்தேன்

முத்துப் போல் உன்னை 

முழுநிலவாய்
பெற்றெடுத்தேன்

மீண்டும் இந்த மண்ணிலே
நானே வந்து பிறந்ததாக
என்னி மகிழ்ந்தேன்

உன்னை
சுமக்கின்ற சுகமிருக்கே
அது சொர்க்கத்திலும்
கிடையாது

சொர்க்கமே
இதுதான் என்று
நான் சொன்னாலும்
புரியாது

உன்னை
தோளில் சுமக்கும்
இந்தத்‌ தருணம்
என் வாழ்வில்
கிடைத்த. உச்சசுகம்

பிறந்த பலனை
நான் அடைந்தேன்
அடுத்த பிறப்பு என்பதை
நான் மறந்தேன்

உறவு என்று
உன்னை சுமந்தேன்
என் உலகமும் சுகமும்
இதுவென மகிழ்ந்தேன் .
              ..தம்பிதுரை ...


Friday, April 21, 2017

தாயே

தாயே 

எத்தனை துடிப்புக்களை உள்ளடிக்கி என்னை சுமந்திருப்பாய் நீயே 

சுமப்பது சுகமென்றாலும்
வலியென்பது வேதனைதானே

வேதனையை

 சாதனையாக.
மாற்றிய உன்னை 

இத்தனை ஆண்டுகள் 
எத்தனை எல்லாம் வேதனைப்படுத்தியிருப்பேன்

என்னை அறியாமலும் 
சில அறிந்தும் 

பிள்ளைகளை வளர்ப்பதில்
பெற்றவர்கள் பலரும் பலவிதமாகவே உள்ளனர் 

ஆனால்

உன் வளர்ப்பைக்கண்டு 
பலர் பொறாமையே படுகின்றனர்

உன்னால் மட்டும் 
எப்படி அப்படி  வளர்க்க முடிந்தது 

வசதி வாய்ப்புகள் கிடையாது உன்னை பெற்றெடுத்த.        

 உன் தாய் தந்தையும் கிடையாது  கல்வியறிவும் கிடையாது 

உன்   கனவணின் அறிவையே
பொது அறிவுப் புத்தகமாக. 

மாற்றிக்கொண்ட.   
ஓர் புதுமையானவள் நீ 

சிறு பிள்ளையிலேயே 
தாய் தந்தையை இழந்த நீ 

நம் பிள்ளைகளும் 
நம் போலவே 
பாசத்திற்கு ஏங்கக்கூடாது என

மொத்த பாசத்தையும்   மிக
சுத்தமான பாசமாக.
கொட்டி  நீ வளர்த்ததாக.

நீயே ஒருமுறை 
சொல்லும் போது 

என் நெஞ்சமெல்லாம் 
நெகிழ்ந்து போனது 

என் பிள்ளைகள் 
வெறும்  பிள்ளைகள் மட்டுமல்ல

இந்த தாயென்ற கோபுரத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் 

உன் சக தோழிகளிடம் 
நீ சொல்லி மகிழ்ந்ததும் 

என் கண்களில் இருந்து 
முத்தாக முத்தாக
  கண்ணீர் நிறைந்தது 

கல்வி 
கற்றவர்களிடமும்  மற்றவர்களிடமும் 

சரிசமமாக பழகும் 
சாமார்த்தியம் பெற்றவள் நீ

உனக்குள் இருந்த.
இந்த அறிவுதான்

இன்று வரையிலும் 
என்னையும் காப்பாற்றுகிறது 

நான் சத்தமிடும் போதெல்லாம் முரடன் என்று முத்திரை குத்தி பயந்து போனாயே   ஏன் 

முரடனாக இருந்தாலும்
பரவாயில்லை 
முட்டாளாக போய்விடுவானோ என்றுதானே

நீ பெற்ற பிள்ளைகளில் 
நான் ஒருவன் மட்டும்  
கல்வியறிவு இல்லாமல் போனேன்
கவலைப்பட்டாய் நீ

  கல்வியறிவு இல்லாமல் போன
காரணமும் அறிவாய் நீ 

நான் முட்டாள் என்பதும் 
ஒரு காரணம் 

ஆனாலும் குடும்பத்தில்
  கஷ்டம்  என்பதுதானே
முழுக்காரணம்  

கல்வியறிவு  இல்லையென்று
என்மீது கவலைப்பட்ட நீயே 

சில ஆண்டுகள் கழித்து
கவலைகள் எல்லாம் மறந்து 

கல்வி 
கற்க வில்லை என்றாலும்   கற்றறிந்த பிள்ளைகளைவிட   உலக அறிவு  கண்டறிந்த.      பிள்ளை  நீ

என்று நீ                                          புகழாரம் சூட்டும் போது  .                  மிக புத்திசாலியோ  நாம்மென்று பெருமிதம் கொண்டதுண்டு 

உன் பொது அறிவின் மகத்துவத்தை                                புரிந்து கொண்டேன் 

இந்த பொது அறிவுதான் 

என்னையும் சில நேரம்  புத்திசாலியாக காட்டியது 

உன் அடங்காத சோகத்தில் 
என் ஆறுதலே மருந்தென்றாய்

கலங்கிப் போனேன் 
என்மீது நீ கொண்ட.
பாசம் கணடு 

அதனால் தான் 
நீ என்னை  

அழைக்க நினைக்குமுன்னே அழைக்காமல் வந்துநிற்ப்பேன் 
உன்  கண் முன்னே 

ஆச்சர்யப்பட்டு போவாய் 
என்ன மாயம் என்று

எத்தனையோ
சோகத்தையும்
சிரமத்தையும்  

வறுமையைகூட.
தாங்கிக் கொள்ளும் நீ

சுடுசொற்களை  
மட்டும்   உன்னால்
  தாங்கி கொள்ள. முடிவதில்லை 

கட்டிய கணவன்
  உன்னோடு
ஒட்டிய உறவுகள் 

நீ பெற்ற பிள்ளைகள் 
என யாரகயிருந்தாலும் 
சுடு சொற்கள் உன் மனதை சுருக்கென்று தைத்துவிடுகிறது

பலமுறை என்னிடம் 
நீ  இதைச் 
சொல்லி சொல்லியே

உன் சோகத்தையும் 
கோபத்தையும் 
கரைத்திருக்கிறாய் 
உனக்குள்ளே

பாசம் இருக்கும் அளவு 
ரோசமும் வைத்திருந்தாய் 

வியந்து போயிருக்கிறேன்
உன் தனித்தும் எப்போதுமே
தளர்ந்து போனதில்லை என்று

குடும்பத்தில் கஷ்டங்கள்
எத்தனையோ இருந்தாலும்
சிறிதளவும் வெளிக்காட்டாமல்

வாழ்கையின் உயரத்தை 
சிகரமென தொட்டாயே  
எப்படி முடிந்தது உன்னால் 

அந்த சூட்சுமம்  என்னவென்று
நானும் அறிந்து கொண்டேன் பின்னால்

ஒழுக்கத்தை
  மிக உயர்வாகவும் 
குடும்ப கெளரவத்தை 
உன் உயிராகவும் 

நீ மதித்துவந்த.
காரணம் தானது

நீ  உன் முந்தானையில் 
முடிந்து வைத்திருந்தது 
சில்லரைக் காசுகள் மட்டுமல்ல பிள்ளைகளின் ஒழுக்கத்தையும்

எழுதிக் கொடுக்கும் 
உயிலில் பத்திரத்தில் கூட.
சரியான பங்கு 
நிச்சயம் இருக்குமென்று 
யாரும் நம்ப முடியாது 

ஆனாலும் 

நீ  சமைத்துவைத்த பலகாரம் 
நடு இரவைக் கடந்தாலும்
பாத்திரத்துக்குள்ளேயே
அவரவர் பங்குகள்
பத்திரமாகவே தான் இருக்கும் 

ஐந்து பொருட்களை

 நான்கு பேருக்கு  

ஒன்னேகால் பங்காக.

உடைத்துக் கொடுப்பவள் நீ 

ஏற்ற தாழ்வு என்பது 
எதிலும் இல்லை உன்னிடம்

பாசமாக இருந்தாலும்  அது 
பணம் பொருளாகவே இருந்தாலும்

மற்ற தாய்களை மட்டம் தட்டி
உன்னை நான் உயர்த்தவில்லை
உன்னை போல் ஒருத்தியை
உலகில் நான் பார்த்ததில்லை 

நீ செய்த தர்மமா 
நான் செய்த தவமா 
நமக்குள்ளே இந்த சொந்தம் 

இந்த ஜென்மத்தில் 
உருவான.
மிக உயர்வான பந்தம்

   தாய்பாசத்தில் தம்பிதுரை

வனம்

வனம்

அடர்ந்த காடு
அதிலே 

ஓங்கி 
உயர்ந்த மலைகள்

உயர்ந்த மலைகளின்
உச்சி வகுந்தெடுத்த
ஆற்றுப் பள்ளம்

மலைகளின் மேலே
கொட்டிய மழைத் துளி

பள்ளம் நோக்கி
பாய்ந்து பெருக்கெடுத்து

காட்டாற்று 
 வெள்ளமென
காட்டிற்கு நடுவிலே

குறுக்கே இருக்கும் 
 அகன்ற பாறைகளின்

நெற்றி மீது  
 ஏறி நின்று 

நெஞ்சை  
 நிமிர்த்திக் கொண்டு

பூமி மீது  
 விழுகின்ற காட்சி 

 வற்றாமல் 
 உயிர் காக்கும் 

 வானத்துக்கும் 
 வனத்துக்கும்
 இணைத்திருக்கும்  
 நீர்வீழ்ச்சி

இந்த வனம்  
 இல்லையென்றால் 

 உயிர்கள் எல்லாம்  
 அழிந்துவிடும்

இந்தவனமே 
  உண்மையில்
 உயிர்காக்கும்  
 நந்தவனமே

உயிரோடு  
 வாழும்போது 
 மனிதன்  
 கான்கின்ற சொர்கம்

உண்மையைச்
 சொன்னால்
நகரம் என்பது நரகம்

வனம் என்பது  
 மனிதனுக்கு
 இயற்கை  
 கொடுத்த வரம் .

............ தம்பிதுரை.......

என் மனைவி

என் மனைவி

நான் நேசிக்கும்
நிஜமான உறவு

என் வாழ்க்கையில்  மகிழ்ச்சியை
வற்றாமல்  வழங்கிக்கொண்டிருக்கும் 
நல்வரவு

என் தாயின் அன்பையும்
என் தந்தையின் ஆற்றலையும் 

என் சகோதர தைரியத்தையும்
எனக்கு ஒன்றாக கொடுப்பவள்

என்னை பின் தொடரும்
என் நிழல் அல்ல அவள்

என் நெஞ்சுக்குள் குடியிருக்கும்
 நிஜமானவள்

காதலித்துக் கைபிடிக்கவில்லை
 கைபிடித்தும் காதலிக்கவில்லை

என்னதான் கொடுத்தாய்
 என்றுதானே கேட்கிறீர்கள்

சோகத்தை கொடுத்தேன்
சுகமாக மாற்றினால்

வறுமையைக் கொடுத்தேன்
 வளமாக ஏற்றுக்கொண்டாள்

பொறுமையை சோதித்தேன்
 பெறுமையாக மாற்றிகொண்டாள்

அருமையான பெண் என்று
 அனைவரும் போற்றினார்கள்

கடுமையான பயிற்சியில்
எனக்கு ஏற்ற துனையாக
நான் மாற்றிக்கொண்டேன்

என்னையே அவளுக்காக
அர்ப்பணித்து நான் ஏற்றுக்கொண்டேன்

அரசனுக்கு பணிவிடைசெய்யும் 
அடியாட்கள் அல்ல அவள்

தெய்வத்திற்கு சேவைசெய்யும்
 தேவனின் அடியாள‍்

பிள்ளைகளுக்கு அவள் தாயல்ல
 நல்ல தோழி

கணவனுக்கு அவள் மனைவியல்ல
 நல்ல தாய்

உறவினர்களிடம் 
அவள் குணம் பற்றி 
உறக்கச் சொன்னேன்

நண்பர்களிடம் அவளின்
 நன்னடத்தை பற்றி 
நன்றி மறக்காமல் எடுத்துரைத்தேன்

மனைவியிடம் மட்டும்
 ஏதுவுமே சொல்லாமல்
மறைத்து விட்டு 
மெளனமாக நின்றுவிட்டேன்

நன்றி கெட்டவன்
நான் என்று  நினைத்து கொண்டு
சத்தமிட்டு சண்டையிடுவாள்
 மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

நான் செய்த பிழைகளுக்கு
 இதை தண்டனையாக 
மாற்றிகொள்வேன்

அவள் மீது நான் கொண்ட அன்பு
 என் பிள்ளைகளுக்கு தெரியும்

என்னை பெற்றவருக்கும்
அவளை பெற்றவருக்கும்

 ஏன் உறவினர்கள் நண்பர்கள்
 அனைவர்களுக்கும் கூட
 நன்கு தெரியும் ஆனால்

அவளுக்கு மட்டும் தெரியாது
 காரணம் நான் அவளை
பாரட்டியதே கிடையாது

நான் அவளை திட்டுவதாக நினைப்பால்
நிஜமாக சொன்னால்
அவளை நான் திட்டுவதில்லை
பட்டை தீட்டப்படுவது

அறியாமையை 
அவளுக்குள் இருந்து
 அகற்றுவது

பல நேரங்களில்
அந்த அறியாமை தான் 

அவளின் முழுமையான 
அன்பையே மொத்தமாக காட்டியது

அவளுக்குள் கஷ்டங்கள்
ஆயிரம் இருந்தாலும் 

அவள் இருக்குமிடம் நிச்சயம்
 கலகலப்புக்கு பஞ்சமிருக்காது

சில நேரங்களில் இவள் ஒரு 
வயதான சிறுபிள்ளையோ
என்று என்னத் தோன்றும்

என்னதான் இருந்தாலும்
அவள் என் மனைவி 
என் உயிரைக் காக்கும் பெட்டகம்

எனக்கு எல்லா வேலைகளும்
 எல்லா உதவிகளையும்
செய்கிறாள் என்பதால் 
அவள் என் அடிமையல்ல

அவளுக்கு
 நான் எந்த உதவியும்
 செய்யவில்லை என்றாலும் 
அவளின் அன்புக்கு நான் 
அடிமையானவன்

என்னை 
ஆண்டுகொண்டிருக்கும் ராணி
வாழ்க்கையில் உயரத்திற்கு
 நான் ஏறிவந்த ஏணி

உறவுகள் என்னவென்றும்
உலகம் என்னவென்றும் 
உணர்வால் எனக்கு 
உணர்த்திக்காட்டிய ஞானி

மறைக்காமல் உண்மையை
 மறுக்காமல் சொன்னால்

ஒருநாள் அவளைபிரிந்தாலும்   
 உ டைந்து விட்டதோ வலக்கை
முடிந்து விட்டதோ வாழ்க்கை
என்று என்னத் தோன்றும்

இதை சொல்வதற்கு எனக்கு
 எந்தவிதமான வெட்கமில்லை

மாறாக மிகவும் பெருமைகொள்கிறேன்

என்னதான் ஆண்மகனாக
நான் இருந்தாலும்

எனக்குள் இருந்து ஆளும் ஆன்மா
என் மனைவி

முடிந்தால் அவளிடத்தில்
என் மனதின் மறுபக்கத்தை
நான் மடிந்து விழுவதற்குமுன்
 மறக்காமல்சொல்லிவிடுங்கள்

                         தம்பிதுரை

இனிப்பு

இனிப்பு மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
சுவை என்ற சொல்லே
இல்லாமல் போயிருக்கும்

இன்பம் மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
சுகம் என்ற.
 வார்த்தைக்கே
வலு இல்லாமல் 
 போயிருக்கும்

வெற்றி மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
அனுபவம் என்பதே
அழிந்து போயிருக்கும்

எதிர்ப்பதம் என்பது நமக்கு
எப்போதும் தேவையிருக்கும்

எதிர்ப்பதம் எதிர்ப்பதும்
இல்லை என்றால்

நம் வாழ்க்கையில்
முயற்சி என்பதும்
பயிற்சி செய்வதும்
பழக்கமற்று போயிருக்கும்

தடுக்கி விழுந்ததைக்காட்டிலும்
 துள்ளி எழுவதை கண்டு
பெருமை கொள்ளவேண்டும்

எதிரிகளை கண்டு
எப்போதும் நாம்
பயந்து போக கூடாது

எதிரிகளே இல்லை என்றால்
 வெற்றிகள் என்பது நமக்கு
வேகமாகக் கிடைக்காமல்
வெறும் கனவாகவே போகும்

நீ நிஜமானவனாக
இருக்கும் போது

தோன்றி மறையும்
தோல்வியைக் கணடோ

எதிரே வருகின்ற
எதிரியைக் கண்டோ

அஞ்சவேண்டிய
அவசியமில்லை

வெற்றியை  
நெருங்கிவிட்டோம்  

 வெகு விரைவிலே  
அதன்  உச்சத்தை  
 தொட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையை மட்டும் 
வளர்த்துக் கொள்ளவேண்டும்

வாழ்த்துக்களுடன் . 
               தம்பிதுரை

அழுகை

அழுகை
மனிதனுக்கு
 இயற்கை கொடுத்த
 மாபெரும் கொடை

அழுகை
உன் ஆனந்தத்தையும்
உன் வேதனைகளையும்
 நீ சொல்லாமலேயே அது
பிறருக்கு சொல்லிவிடும்

அழுகை
சில நேரம் அது
உன் உயிர்காக்கும் 
கேடயமாகிறது
அதுவும் உனக்குத் 
தெரியாமலே

உன் துக்கத்தை 
நெஞ்சுக்குள் 
கரைக்கிறது
உன் சோகத்தை 
வெகுவாக 
குறைக்கின்றது

அழுகைபலவிதம்
ஆனால் எல்லாமே 
 மிக அற்புதம்

கோடி கொடுத்தாலும்
கிடைக்காத சுகம் ஓர்
அழுகையிலே 
கிடைத்துவிடும்

கோடி கிடைத்த 
மகிழ்ச்சியைக்கூட
 இந்த அழுகைதான்
 வெளிக்காட்டும்

நன்றி 
என்பது கூட
 வார்த்தைகளைக் காட்டிலும்
அழுகையே 
மிக அழகான 
கவிதையாக கூறும்

சிரிப்புக்கு பிறகு
 அழுகை மட்டுமே
 உன்னை 
குழந்தையாக காட்டும் 
ஆற்றல் பெற்றது

சிரிப்பைக் காட்டிலும் 
அழுகையே
பல வெற்றிகளையும் பெற்றது

சிரிப்பு உன்னை
அழகானவனாக காட்டும்

அழுகை உன்னை மிகப்
 புதியவனாகக் காட்டும்

அழுகை
உனக்கு பல ஞானத்தைக் கொடுக்கும்

நீ பிறக்கும் போது
 நீ அழுதாலும்
நீ இறக்கும் போது 
பிறரையும் அழவைக்கும்

அழுகை 
அசிங்கமானதல்லா 
ஆழாமானது,   
அற்புதமானது 
 மிகவும் ஆனந்தமானது 

.........தம்பிதுரை......

Friday, January 27, 2017

ஜெ மரணம்

தங்கமே
 இதுவரையில்  
 உழைத்தது
 போதுமென்று  
 ஓய்வெடுத்து 
 உறங்குகிறாயா

 சிங்கமே
 உன் சீற்றத்தின்  
 கண்களை நீ
 திரையிட்டு 
  நித்திரையில் 
   இருக்கின்றாயா 

 புள்ளி மானை  
 துள்ளிக் குதித்த
 பொற்பாதம் ஓய்ந்ததா

 பூங்குயிலாய் பாடிய குரல்
போதுமென்று சாய்ந்ததா

 கர்ஜித்த கனிர்குரல்
 ஓசையின்றி உறங்கியதே

 எதிரிகளை கைநீட்டி
 சவாலுக்கு அழைத்த கரம்


 ஏன் இங்கு 
  கைமடித்து  
 பெட்டிக்குள்  
 உறங்குகிறாய்

 காலத்தின்  
  கட்டாயமா
 இயற்கையின்  
 கோரப்பசிக்கு
 உன் உடலும் இரையானதா

 மக்கள்

 அழுகின்ற கண்ணிரும் 
 வங்கத்து அலைகடலாய்
 ஆற்பறித்து பொங்கியதே

 மக்கள் கதருகின்ற
 ஒலக்குரல்
 வானம் தொட்டு எட்டியதே

 எதையுமே கேட்காமல்
 ஏன் இன்னும் உறங்குகிறாய்

 மக்கள்
 தவிப்பதை காணாமல்
 தன்நினைவின்றி 
  தூங்குகிறாய்

 அம்மா அம்மா என்று
அழுகின்ற குழந்தைகளும்

 அம்மா அம்மா என்று
 அழுகின்ற அம்மாக்களும்

 ஒன்றாக அழும்குரல்
 உன் காதில் விழவில்லையா

 எத்தனையோ போராட்டங்கள்
 போராடி நீ வெற்றி கண்டாய்

 எமனோடு மற்றும் போராடி
 ஏன் அவனை வெள்ளவிட்டாய்

 எதை கேட்டாலும்  
 கொடுக்கும் நீ 

உன் உயிரைக் கேட்டதால்
 கொடுத்துவிட்டாயா

 உன் உடல் மறைந்தாலும்
உன் பகழ் மறையாது

 உன் பிள்ளைகளின்
 உள்மனது  -  அது
 நீ வாழும் கோவில் அது

தத்தளித்துக் கதருகின்ற
தமிழகத்தில் 

 தம்பிதுரையும் 
 ஒருவன் தான்..............

Thursday, January 26, 2017

மரம்

மரம் 

மழையின் தாய் 

மனிதனின் உயிர் மூச்சு

பறவைகள் முதல்
பல உயிர்களுக்கு
நிரந்தர கூடு

நிழல் தரும் தேவதை 

வெப்பத்தை தடுக்கும்
ஓர் குடை

கடினமான மண்ணையும்
 கடினமான பாறைகளையும்
துளைத்துக்கொண்டு
வெளியே வரும்

தன்னம்பிக்கையின்
மற்றொரு பெயர்

மனிதன் உயிர் வாழ
சுவாசக் காற்றை 
 உருவாக்கும்
 இன்னொரு கடவுள்

செடி கொடி மரம் என்று
எதையும் பிரிக்க 
வேண்டாம்

தாவரங்கள் என்ற. 
ஒற்றை சொல்லின்
  குழந்தைகள்

தன்னலமில்லாமல்
சுயநலம் கொள்ளாமல்

உலகுக்கும் 
மனிதனுக்கும்  
வாரி வாரி கொடுக்கும்
முதல் வள்ளல்

மனிதனின் 
உயிர்காக்கும்
 மனிதனின் 
முதல் உறவுகள்

பூக்கள் காய்கள் 
கனிகள் என 

மரங்கள் தருவது 
மனிதனுக்கு மாபெரும் 
சீதனங்கள்

கொழுந்துகள் இலைகள்
தழைகள் வேர்கள் 
காய்கள் பூக்கள் 
மரப்பட்டைகள் என
மரத்தின் எல்லா 
உறுப்புகளும்

 மனிதனின் உயிர் காக்கும்
 மாபெரும் மருத்துவர்கள்

என்னை காக்கும் மரமே இனி 
உன்னை காக்க வருவேன்
 என சபதம் 
 எடுத்துக்கொள்ளுங்கள்

வருங்கால 
 நம் சந்ததிகள்
 வசந்தத்தோடு 
 உயிர்வாழட்டும்

மரம் நடுவோம் 
 நிழல் பெருவோம்
 மரம் தழைக்க கொஞ்சம்
தண்ணீர் கொடுங்கள்

 மரமும் நமக்கு 
 இன்னொரு தாய்   
                                      தம்பிதுரை....

நான் வடிப்பேன் காவியம்

செவ்வண்ணப் பூப்பாதம் .இப்
புவி மீது படும்போது

ஜில் என்று சலங்கை ஒலி
ஜிவ் என்று மேல்லெலும்பும்

ஓடிவந்த வாலிபர்களில்
ஒருவனாக நானிருந்தேன்  

உன் அழகை கண்டவுடன்
ஓரத்தில் ஒதுங்கிவிட்டேன்

துள்ளி ஓடும் புள்ளி மானுக்கு 
வெள்ளிச்சலங்கை கட்டியது போல்

தோகையிளம் மயிலுக்கு
 பொன்னாடை
போர்த்தியது போல்
நீ நடந்தாய்

உன் பாதம் பட்ட மண்ணுக்கு கூட
 பெருமைக்கு மேல் பெருமையடி

வானத்து விண்மீன்கள் 
உன் விழியில் அள்ளிவைத்து
நிலவென்னும் வட்டமுகம் தாங்கியதோ

நீர் தாங்கும் கருமேகம்
நீ வளர்த்த பட்டு வண்ணக்கூந்தலோ

மூங்கிலிலே தோல் செய்து
 வெண்டை பிஞ்சு விரல் வைத்து
கை வீசி நடக்கையிலே  - என்
கண் பட்டு விட்டதடி

கோடி மலர் மணம் உண்டு
உன் கூந்தலுக்கு . அதில்
குறுக்கே எதற்கடி தாழம்பூ

கோவைக்கனியை
இரண்டாய் பிளந்து
கொம்புத்தேனில்
நனைத்தது போல் இதழ்கள்

ஆரடி நிள அழகு கூந்தலை
 கருநாகமென பின்னியிருக்க
தேற்க்கும் வடக்கும் எட்டி எட்டி 
பார்த்து செல்கின்றது

நீர் தாங்கும் குடம் ஒன்றை
நீ தாங்கி போகையிலே
நுலான நுலிடை
அது தாங்குமா
இந்த எடை- என்று
என்மனம் வாடுதடி

ஆடை கொஞ்சம் தூக்கி கட்டி 
அன்னம் என நடைபயின்று

வாழைத்தண்டு காலை காட்டி
 ஏன்னை வதைப்பதேனடி வாலிபமூட்டி

வானவில்லின் வடிவை போல 
வளைந்து நீயும் நாணம் கொள்ள
வானத்து தேவதையே
வந்த விட்டால் உன் வடிவில்

வாலிபவட்டம் முதல்
வயதினர்கள் கூட்டம் வரை

வாய் பிளந்து பார்க்கும் வண்ணம்
 வரைந்து வைத்த ஓவியமே

நீ மட்டும் என்
 வாழ்க்கை துணையாய் 
வந்து விட்டால்
காலமெல்லாம் வடிப்பேன் காவியமே
 தம்பிதுரை