Sunday, November 26, 2017

என் மகள்

என் மகள்
மடியில் விதையாக
விழும்போதே 
மனதில் பல
கனவுகளை தந்தாள்

மனதுக்குள்
பல உருவங்கள் தந்து 
மகிழ்ச்சியைத் தந்தாள்

மலரின் மொட்டுபோல
மெல்ல. மலர்ந்தாள்

மனம் எங்கும் மணம் வீசி
மனதுக்குள் நிறைந்தாள்

மையிருட்டாய்
இருந்த என் வாழ்வில்

இருளை அழிக்கும்
  இளங்கதிராக. உதித்தாள்

முழுமதியான அவள்
முகம் பார்த்து

இயற்கை நமக்களித்த
வெகுமதியென மகிழ்ந்தேன்

உள்ளத்தில்
ஓர் படபடப்பு

உயிருக்குள்ளே
இன்னொரு
உயிர் துடிப்பு

முதல் முதலில்
என் கைகளில்
மலர்கொடிபோல் அவள்
தவழும்போது

முத்து முத்தாக
கண்ணீர் துளிகள்

மொத்த மகிழ்ச்சியையும்
மிச்சமின்றிக் கொட்டியது

தென்றல்
தேனிசை பாடியது
நதிகள் நாட்டியமாடியது

நீலவானில்
வெண்மேகம்
ஊர்வலமாய் போகின்றது

நம்மாலும்
முடிகின்றது
ஒரு தேவதையை
படைப்பதற்கு

நம் வாழ்விலும்
கிடைக்கிறது 
பெரும் புதையலைவிட
ஓர் பெண் குழந்தை நமக்கு

என்மகள்
எனக்குக் கிடைத்த
அந்த தினம்

இயற்கை
எனக்களித்த
மிகப் பெரிய வரம்
              ..... தம்பிதுரை .......

No comments:

Post a Comment