Friday, May 5, 2017

தாய்

நான் பிறந்த போது
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

சிறுமியாக
சுற்றித் திரிந்ததும்

தாய் தந்தை
தோளில் தவழ்ந்ததும்

ஓடியாடி
விளையாடிய போதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

இனிப்புப் புளிப்பு
காரங்களை
சுவைத்தபோதும்

எத்தனயோ பழங்கள்
காய்கள் கடித்தபோதும்

இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

பள்ளியிலே
படித்த போதும்
பருவம் அடைந்த போதும்

ஆண் துனை
கிடைத்தபோதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

உணவுக்கு
வழியில்லை
என்னை வறுமையும்
விடவில்லை

உழைக்கவும்
பயமில்லை
வயிற்றிலே
வளருது பிள்ளை

முன்னூறு நாள்
சுமந்தேன்
எத்தனையோ
இன்னல்களை
இடைவிடாது கடந்தேன்

முத்துப் போல் உன்னை 

முழுநிலவாய்
பெற்றெடுத்தேன்

மீண்டும் இந்த மண்ணிலே
நானே வந்து பிறந்ததாக
என்னி மகிழ்ந்தேன்

உன்னை
சுமக்கின்ற சுகமிருக்கே
அது சொர்க்கத்திலும்
கிடையாது

சொர்க்கமே
இதுதான் என்று
நான் சொன்னாலும்
புரியாது

உன்னை
தோளில் சுமக்கும்
இந்தத்‌ தருணம்
என் வாழ்வில்
கிடைத்த. உச்சசுகம்

பிறந்த பலனை
நான் அடைந்தேன்
அடுத்த பிறப்பு என்பதை
நான் மறந்தேன்

உறவு என்று
உன்னை சுமந்தேன்
என் உலகமும் சுகமும்
இதுவென மகிழ்ந்தேன் .
              ..தம்பிதுரை ...


No comments:

Post a Comment