Friday, April 21, 2017

தாயே

தாயே 

எத்தனை துடிப்புக்களை உள்ளடிக்கி என்னை சுமந்திருப்பாய் நீயே 

சுமப்பது சுகமென்றாலும்
வலியென்பது வேதனைதானே

வேதனையை

 சாதனையாக.
மாற்றிய உன்னை 

இத்தனை ஆண்டுகள் 
எத்தனை எல்லாம் வேதனைப்படுத்தியிருப்பேன்

என்னை அறியாமலும் 
சில அறிந்தும் 

பிள்ளைகளை வளர்ப்பதில்
பெற்றவர்கள் பலரும் பலவிதமாகவே உள்ளனர் 

ஆனால்

உன் வளர்ப்பைக்கண்டு 
பலர் பொறாமையே படுகின்றனர்

உன்னால் மட்டும் 
எப்படி அப்படி  வளர்க்க முடிந்தது 

வசதி வாய்ப்புகள் கிடையாது உன்னை பெற்றெடுத்த.        

 உன் தாய் தந்தையும் கிடையாது  கல்வியறிவும் கிடையாது 

உன்   கனவணின் அறிவையே
பொது அறிவுப் புத்தகமாக. 

மாற்றிக்கொண்ட.   
ஓர் புதுமையானவள் நீ 

சிறு பிள்ளையிலேயே 
தாய் தந்தையை இழந்த நீ 

நம் பிள்ளைகளும் 
நம் போலவே 
பாசத்திற்கு ஏங்கக்கூடாது என

மொத்த பாசத்தையும்   மிக
சுத்தமான பாசமாக.
கொட்டி  நீ வளர்த்ததாக.

நீயே ஒருமுறை 
சொல்லும் போது 

என் நெஞ்சமெல்லாம் 
நெகிழ்ந்து போனது 

என் பிள்ளைகள் 
வெறும்  பிள்ளைகள் மட்டுமல்ல

இந்த தாயென்ற கோபுரத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் 

உன் சக தோழிகளிடம் 
நீ சொல்லி மகிழ்ந்ததும் 

என் கண்களில் இருந்து 
முத்தாக முத்தாக
  கண்ணீர் நிறைந்தது 

கல்வி 
கற்றவர்களிடமும்  மற்றவர்களிடமும் 

சரிசமமாக பழகும் 
சாமார்த்தியம் பெற்றவள் நீ

உனக்குள் இருந்த.
இந்த அறிவுதான்

இன்று வரையிலும் 
என்னையும் காப்பாற்றுகிறது 

நான் சத்தமிடும் போதெல்லாம் முரடன் என்று முத்திரை குத்தி பயந்து போனாயே   ஏன் 

முரடனாக இருந்தாலும்
பரவாயில்லை 
முட்டாளாக போய்விடுவானோ என்றுதானே

நீ பெற்ற பிள்ளைகளில் 
நான் ஒருவன் மட்டும்  
கல்வியறிவு இல்லாமல் போனேன்
கவலைப்பட்டாய் நீ

  கல்வியறிவு இல்லாமல் போன
காரணமும் அறிவாய் நீ 

நான் முட்டாள் என்பதும் 
ஒரு காரணம் 

ஆனாலும் குடும்பத்தில்
  கஷ்டம்  என்பதுதானே
முழுக்காரணம்  

கல்வியறிவு  இல்லையென்று
என்மீது கவலைப்பட்ட நீயே 

சில ஆண்டுகள் கழித்து
கவலைகள் எல்லாம் மறந்து 

கல்வி 
கற்க வில்லை என்றாலும்   கற்றறிந்த பிள்ளைகளைவிட   உலக அறிவு  கண்டறிந்த.      பிள்ளை  நீ

என்று நீ                                          புகழாரம் சூட்டும் போது  .                  மிக புத்திசாலியோ  நாம்மென்று பெருமிதம் கொண்டதுண்டு 

உன் பொது அறிவின் மகத்துவத்தை                                புரிந்து கொண்டேன் 

இந்த பொது அறிவுதான் 

என்னையும் சில நேரம்  புத்திசாலியாக காட்டியது 

உன் அடங்காத சோகத்தில் 
என் ஆறுதலே மருந்தென்றாய்

கலங்கிப் போனேன் 
என்மீது நீ கொண்ட.
பாசம் கணடு 

அதனால் தான் 
நீ என்னை  

அழைக்க நினைக்குமுன்னே அழைக்காமல் வந்துநிற்ப்பேன் 
உன்  கண் முன்னே 

ஆச்சர்யப்பட்டு போவாய் 
என்ன மாயம் என்று

எத்தனையோ
சோகத்தையும்
சிரமத்தையும்  

வறுமையைகூட.
தாங்கிக் கொள்ளும் நீ

சுடுசொற்களை  
மட்டும்   உன்னால்
  தாங்கி கொள்ள. முடிவதில்லை 

கட்டிய கணவன்
  உன்னோடு
ஒட்டிய உறவுகள் 

நீ பெற்ற பிள்ளைகள் 
என யாரகயிருந்தாலும் 
சுடு சொற்கள் உன் மனதை சுருக்கென்று தைத்துவிடுகிறது

பலமுறை என்னிடம் 
நீ  இதைச் 
சொல்லி சொல்லியே

உன் சோகத்தையும் 
கோபத்தையும் 
கரைத்திருக்கிறாய் 
உனக்குள்ளே

பாசம் இருக்கும் அளவு 
ரோசமும் வைத்திருந்தாய் 

வியந்து போயிருக்கிறேன்
உன் தனித்தும் எப்போதுமே
தளர்ந்து போனதில்லை என்று

குடும்பத்தில் கஷ்டங்கள்
எத்தனையோ இருந்தாலும்
சிறிதளவும் வெளிக்காட்டாமல்

வாழ்கையின் உயரத்தை 
சிகரமென தொட்டாயே  
எப்படி முடிந்தது உன்னால் 

அந்த சூட்சுமம்  என்னவென்று
நானும் அறிந்து கொண்டேன் பின்னால்

ஒழுக்கத்தை
  மிக உயர்வாகவும் 
குடும்ப கெளரவத்தை 
உன் உயிராகவும் 

நீ மதித்துவந்த.
காரணம் தானது

நீ  உன் முந்தானையில் 
முடிந்து வைத்திருந்தது 
சில்லரைக் காசுகள் மட்டுமல்ல பிள்ளைகளின் ஒழுக்கத்தையும்

எழுதிக் கொடுக்கும் 
உயிலில் பத்திரத்தில் கூட.
சரியான பங்கு 
நிச்சயம் இருக்குமென்று 
யாரும் நம்ப முடியாது 

ஆனாலும் 

நீ  சமைத்துவைத்த பலகாரம் 
நடு இரவைக் கடந்தாலும்
பாத்திரத்துக்குள்ளேயே
அவரவர் பங்குகள்
பத்திரமாகவே தான் இருக்கும் 

ஐந்து பொருட்களை

 நான்கு பேருக்கு  

ஒன்னேகால் பங்காக.

உடைத்துக் கொடுப்பவள் நீ 

ஏற்ற தாழ்வு என்பது 
எதிலும் இல்லை உன்னிடம்

பாசமாக இருந்தாலும்  அது 
பணம் பொருளாகவே இருந்தாலும்

மற்ற தாய்களை மட்டம் தட்டி
உன்னை நான் உயர்த்தவில்லை
உன்னை போல் ஒருத்தியை
உலகில் நான் பார்த்ததில்லை 

நீ செய்த தர்மமா 
நான் செய்த தவமா 
நமக்குள்ளே இந்த சொந்தம் 

இந்த ஜென்மத்தில் 
உருவான.
மிக உயர்வான பந்தம்

   தாய்பாசத்தில் தம்பிதுரை

No comments:

Post a Comment