Friday, April 21, 2017

என் மனைவி

என் மனைவி

நான் நேசிக்கும்
நிஜமான உறவு

என் வாழ்க்கையில்  மகிழ்ச்சியை
வற்றாமல்  வழங்கிக்கொண்டிருக்கும் 
நல்வரவு

என் தாயின் அன்பையும்
என் தந்தையின் ஆற்றலையும் 

என் சகோதர தைரியத்தையும்
எனக்கு ஒன்றாக கொடுப்பவள்

என்னை பின் தொடரும்
என் நிழல் அல்ல அவள்

என் நெஞ்சுக்குள் குடியிருக்கும்
 நிஜமானவள்

காதலித்துக் கைபிடிக்கவில்லை
 கைபிடித்தும் காதலிக்கவில்லை

என்னதான் கொடுத்தாய்
 என்றுதானே கேட்கிறீர்கள்

சோகத்தை கொடுத்தேன்
சுகமாக மாற்றினால்

வறுமையைக் கொடுத்தேன்
 வளமாக ஏற்றுக்கொண்டாள்

பொறுமையை சோதித்தேன்
 பெறுமையாக மாற்றிகொண்டாள்

அருமையான பெண் என்று
 அனைவரும் போற்றினார்கள்

கடுமையான பயிற்சியில்
எனக்கு ஏற்ற துனையாக
நான் மாற்றிக்கொண்டேன்

என்னையே அவளுக்காக
அர்ப்பணித்து நான் ஏற்றுக்கொண்டேன்

அரசனுக்கு பணிவிடைசெய்யும் 
அடியாட்கள் அல்ல அவள்

தெய்வத்திற்கு சேவைசெய்யும்
 தேவனின் அடியாள‍்

பிள்ளைகளுக்கு அவள் தாயல்ல
 நல்ல தோழி

கணவனுக்கு அவள் மனைவியல்ல
 நல்ல தாய்

உறவினர்களிடம் 
அவள் குணம் பற்றி 
உறக்கச் சொன்னேன்

நண்பர்களிடம் அவளின்
 நன்னடத்தை பற்றி 
நன்றி மறக்காமல் எடுத்துரைத்தேன்

மனைவியிடம் மட்டும்
 ஏதுவுமே சொல்லாமல்
மறைத்து விட்டு 
மெளனமாக நின்றுவிட்டேன்

நன்றி கெட்டவன்
நான் என்று  நினைத்து கொண்டு
சத்தமிட்டு சண்டையிடுவாள்
 மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

நான் செய்த பிழைகளுக்கு
 இதை தண்டனையாக 
மாற்றிகொள்வேன்

அவள் மீது நான் கொண்ட அன்பு
 என் பிள்ளைகளுக்கு தெரியும்

என்னை பெற்றவருக்கும்
அவளை பெற்றவருக்கும்

 ஏன் உறவினர்கள் நண்பர்கள்
 அனைவர்களுக்கும் கூட
 நன்கு தெரியும் ஆனால்

அவளுக்கு மட்டும் தெரியாது
 காரணம் நான் அவளை
பாரட்டியதே கிடையாது

நான் அவளை திட்டுவதாக நினைப்பால்
நிஜமாக சொன்னால்
அவளை நான் திட்டுவதில்லை
பட்டை தீட்டப்படுவது

அறியாமையை 
அவளுக்குள் இருந்து
 அகற்றுவது

பல நேரங்களில்
அந்த அறியாமை தான் 

அவளின் முழுமையான 
அன்பையே மொத்தமாக காட்டியது

அவளுக்குள் கஷ்டங்கள்
ஆயிரம் இருந்தாலும் 

அவள் இருக்குமிடம் நிச்சயம்
 கலகலப்புக்கு பஞ்சமிருக்காது

சில நேரங்களில் இவள் ஒரு 
வயதான சிறுபிள்ளையோ
என்று என்னத் தோன்றும்

என்னதான் இருந்தாலும்
அவள் என் மனைவி 
என் உயிரைக் காக்கும் பெட்டகம்

எனக்கு எல்லா வேலைகளும்
 எல்லா உதவிகளையும்
செய்கிறாள் என்பதால் 
அவள் என் அடிமையல்ல

அவளுக்கு
 நான் எந்த உதவியும்
 செய்யவில்லை என்றாலும் 
அவளின் அன்புக்கு நான் 
அடிமையானவன்

என்னை 
ஆண்டுகொண்டிருக்கும் ராணி
வாழ்க்கையில் உயரத்திற்கு
 நான் ஏறிவந்த ஏணி

உறவுகள் என்னவென்றும்
உலகம் என்னவென்றும் 
உணர்வால் எனக்கு 
உணர்த்திக்காட்டிய ஞானி

மறைக்காமல் உண்மையை
 மறுக்காமல் சொன்னால்

ஒருநாள் அவளைபிரிந்தாலும்   
 உ டைந்து விட்டதோ வலக்கை
முடிந்து விட்டதோ வாழ்க்கை
என்று என்னத் தோன்றும்

இதை சொல்வதற்கு எனக்கு
 எந்தவிதமான வெட்கமில்லை

மாறாக மிகவும் பெருமைகொள்கிறேன்

என்னதான் ஆண்மகனாக
நான் இருந்தாலும்

எனக்குள் இருந்து ஆளும் ஆன்மா
என் மனைவி

முடிந்தால் அவளிடத்தில்
என் மனதின் மறுபக்கத்தை
நான் மடிந்து விழுவதற்குமுன்
 மறக்காமல்சொல்லிவிடுங்கள்

                         தம்பிதுரை

No comments:

Post a Comment