Thursday, January 26, 2017

மரம்

மரம் 

மழையின் தாய் 

மனிதனின் உயிர் மூச்சு

பறவைகள் முதல்
பல உயிர்களுக்கு
நிரந்தர கூடு

நிழல் தரும் தேவதை 

வெப்பத்தை தடுக்கும்
ஓர் குடை

கடினமான மண்ணையும்
 கடினமான பாறைகளையும்
துளைத்துக்கொண்டு
வெளியே வரும்

தன்னம்பிக்கையின்
மற்றொரு பெயர்

மனிதன் உயிர் வாழ
சுவாசக் காற்றை 
 உருவாக்கும்
 இன்னொரு கடவுள்

செடி கொடி மரம் என்று
எதையும் பிரிக்க 
வேண்டாம்

தாவரங்கள் என்ற. 
ஒற்றை சொல்லின்
  குழந்தைகள்

தன்னலமில்லாமல்
சுயநலம் கொள்ளாமல்

உலகுக்கும் 
மனிதனுக்கும்  
வாரி வாரி கொடுக்கும்
முதல் வள்ளல்

மனிதனின் 
உயிர்காக்கும்
 மனிதனின் 
முதல் உறவுகள்

பூக்கள் காய்கள் 
கனிகள் என 

மரங்கள் தருவது 
மனிதனுக்கு மாபெரும் 
சீதனங்கள்

கொழுந்துகள் இலைகள்
தழைகள் வேர்கள் 
காய்கள் பூக்கள் 
மரப்பட்டைகள் என
மரத்தின் எல்லா 
உறுப்புகளும்

 மனிதனின் உயிர் காக்கும்
 மாபெரும் மருத்துவர்கள்

என்னை காக்கும் மரமே இனி 
உன்னை காக்க வருவேன்
 என சபதம் 
 எடுத்துக்கொள்ளுங்கள்

வருங்கால 
 நம் சந்ததிகள்
 வசந்தத்தோடு 
 உயிர்வாழட்டும்

மரம் நடுவோம் 
 நிழல் பெருவோம்
 மரம் தழைக்க கொஞ்சம்
தண்ணீர் கொடுங்கள்

 மரமும் நமக்கு 
 இன்னொரு தாய்   
                                      தம்பிதுரை....

No comments:

Post a Comment