Friday, February 23, 2018

சுமை

பள்ளிக்குச் சென்றேன்
முதன்முதலாக.
கல்விகள் கற்க
புத்தகம் சுமந்தேன்

பருவம் அடைந்ததும் 
.படிப்பை இழந்தேன் 
ஆண்பிள்ளை  தோழன்
பழகுவான் என்ற
  பலியைச் சுமந்தேன்

கட்டிய கணவன் 
கட்டிலின் மேலே 
காதலினாலே 
கனவைச் சுமந்தேன் 

சுமந்தவன் சுமையல்ல.
சுமப்பதும் சுகமுண்டு 
கர்பம் தரித்து மடியினில் 
கருவைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
வறுமையினாலே
தோலில் விழுந்தது 
குடும்பத்தைச் சுமந்தேன் 

கட்டிய கணவன் 
பெற்ற பிள்ளைகள் 
கைவிட்டதாலே 
பசியைச் சுமந்தேன் 

சுமப்பதுதான் 
சுகமென்று
நினைத்து

சுடுகாடு 
போகின்றவரை 
நிழைத்து 

உழைத்துப் 
பிழைத்திடவே
தோலின் மேலே
பாரம் ஏற்றி

சுமைகளையே 
சுமக்கின்றேன் 

சுமை கூலியை 
வாங்கிடுவேனா

சுமை தாங்காமல் 
வீழ்ந்திடுவேனா 

சுமக்கவைக்கும்
எம் மக்களே 

என்னைச்  சுட்டெரிக்க
வைத்துக் கொள்ளுங்கள் 
நான் சுமக்கும் 
இந்த சுள்ளிச் 
சுமைகளையே 

சுமையான.
மனதுடன் 

தம்பிதுரை ......

Wednesday, February 21, 2018

மாணவர்கள்

மாணவர்கள்

யானையின் பலம் 
கொண்டவர்கள் 

தன் பலம் 
என்ன என்பதை 
யானையைப் போல
உணராதவர்கள் 

மாணவர்கள் 
கூறிய போர்வாள்கள் 
வெட்டிச் சாய்க்கும் 
திறன் இருந்தும் 
வெட்டத் தெரியாதவன் 
கைகளிலே 
வீனாகப் போகின்றார்கள்

அவனுக்குள் இருக்கும் 
அறிவு ஆற்றல் 
அடங்காத காட்டாறாய் 
பெருக்கெடுக்கும் 
நீர் ஊற்றாய் 

மாணவர்கள் 
வானத்திலிருந்து
பொழிகின்ற.
மழைத்துளிகள் 

கங்கையிலோ 
காவேரியிலோ 
இவர்கள் விழாமல் 

சில நேரம் சில பேர்கள்
சாக்கடையில் 
விழுந்துவிடுகிறார்கள்

மாணவர்கள் 
வைரமாகவோ 
மாணிக்கம் ஆகவோ 

விலைமதிக்க முடியாத.
அலங்காரப் பொருளாக இருக்கவேண்டும் என.
எண்ணாதீர்கள் 

அவன்
அனைத்தையும் 
சுட்டு எரிக்கும் 
நெருப்பைப் போன்றவன்

மாணவர்கள் வீரியம்
மற்றவர்களால்  
மட்டம் தட்டப்படுகிறது 

உண்மையில் 
மாணவர்கள் 
அவர்களின் 
வாழ்க்கையை
அவர்கள் 
வாழவேயில்லை 

பெற்றோர்கள் பெரியோர்கள் கற்றோவர்கள் மற்றவர்கள்
இவர்களின் கற்பனைக்கு
செயல்வடிவம் தருகின்றான்

வெற்றிகளைத் 
தனதென்று 
இவர்கள் 
பரித்துக் கொள்வார்கள்

தோல்விகளை 
இவனது தோலில்
தொங்கவிடுவார்கள் 

சரியான.
பாதையைக்  காட்டிவிட்டால் நினைத்ததை நடத்துவார்கள்

மாணவர்கள் 
வைரமானவர்கள் அல்ல

மாணவர்கள்
வைராக்கியம் ஆனவர்கள்

தீண்டும் வரை 
அவர்கள் இங்கே 

வெறும் திரியாகத்தான் 
தெரிவார்கள்

தீண்டி விட்டால் 
அன்றே தெரியும் 
அவர்கள்  திரியல்ல.
உலகையே சுட்டெரிக்கும்

சூரியனின்
தீப்பொறிகள் என்று

சுடு தனியாத
தம்பிதுரை

Tuesday, February 20, 2018

பட்டுப்போன மரம்

ஏய்
பட்டுப்போன மரமே

உன்னை
விட்டுப்போன உறவால்
காய்ந்து சுறுங்கி
தனிமையில்
வெறுமையில்
தவிக்கின்றாய்

நீ பசுமையாய்
இருக்கும்போது
உன் இடத்தில்
உன் நிழலில்
இளைப்பாரியவர்கள்

உன் காய் கனிகளை
சுவைத்தவர்கள்

உன் காற்றை
சுவாசித்தவர்கள்

உன்னை விட்டு
விலகியதால்
நீ பட்டுப் போனாயா

நீ பட்டுப் போனதால்
உன்னை விட்டு
விலகிப் போனார்களா

உனக்கு மட்டும்
இந்த நிலையில்லை

சில வீட்டுக் கிழத்துக்கும்
இந்த நிலைதான்

இருவருமே
எரிவதற்க்காக
காத்து நிற்கின்றீர்கள்

உன்னை
எரிப்பதற்காகவே 

பார்த்திருப்பவர்கள்

வீட்டில் உள்ள கிழம்
எப்போது எரிப்போம் எனக்    காத்திருக்கிறார்கள்

இன்று நீ நாளை நான்
என்பதை மறந்த உலகம்

         தம்பிதுரை


Monday, February 19, 2018

கவிஞன்

பொய் சொல்வது
தவறு என்று
போதித்தாள்
என் அன்னை

ஒழுக்கம் எனக்குள்
வரவேண்டும் என்று

பொய் சொல்வது
தவறில்லை

பொய் 
சொல்பவர்கள் தான் 
  பொருளும் புகழும் 
சேர்தனர்

போட்டுடைத்தார் 
  என் தந்தை

என்னப்பா 
சொல்கிறீர்கள் 
வியப்போடு கேட்டேன்
விபரத்தைச் சொன்னார்

கம்பன் 
காளிதாசன் முதல் 

கண்ணதாசன் 
வாலி தாண்டி 
வைரமுத்து வரை

பொய் 
சொல்லித்தான்
பொருளும் புகழும் 
சேர்த்னர்

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து
புலவர் பெருமான் என்கிறார்

கண்ணுக்கு 
மை அழகு
கவிதைக்கு 
பொய் அழகு

ஒரு பொய்யாவது
சொல் கண்ணே

உன் காதலன்
நான் தான் என்று

அந்தப் பொய்யில்
உயிர் வாழ்வேன்

ஆகவே
பொய் சொல்வது
தவறில்லை என்றார்

நானும் யோசித்தேன்
நானும் முயற்சித்தேன்

சாதாரணப்
பெண்ணைப் பார்த்து
மானே மீனே
மயிலே குயிலே என்றேன்

நம்பிவிட்டார்கள் இந்தப் பெண்பிள்ளைகள்

நானும் புறப்பட்டேன்
பொய் சொல்லவதற்கு
        தம்பிதுரை