Monday, January 29, 2018

நம் சொந்தம்

நம் ரத்த சொந்தங்கள் 
நமது பிள்ளைகள்

நம் பிள்ளைகளின்
பிள்ளைகள்
நம் பிள்ளையின்
பேரப்பிள்ளைகள்

என எத்தனையோ பேர்கள்

நமக்கு இருந்தும்   

இருந்தும் இல்லாமல் 
இருக்கின்றோம்  


இந்த உலகில் இருந்தும் 
தனியாக தவிக்கிறோம் 

உன் உயிருக்கு ஏதேனும் 
நோய்நொடிகள் வந்திடுமோ  

என் உயிருக்கு ஏதேனும் 
ஆபத்துகள் வந்திடுமோ என.

எத்தனை காலங்கள் நாம் 
இருவரும் பயந்து  

இளமை காலத்தில் 
ஒன்றாக இணைந்து
வாழ்ந்திருப்போம்  

எப்போது இருளும் 
எப்போது விடியும்  என

எதிர்பார்த்த காலங்கள்
எல்லாமே மாறிப்போய் 

எதற்காக இருள்கிறது
எதற்க்காக விடிகிறது  

என்பது கூடத் தெரியாமல் 
எல்லாக் காலங்களுமே
நமக்கு இப்போது 
ஒன்றாகத்தானே தெரிகிறது 

இன்று 

ஓர் தாயும் மகனும் போல
ஓர் தந்தையும் மகளும் போல.
நம் உறவு மாறிப்போனதே 

எத்தனை எதிர்ப்பு 
எத்தனை பிரச்சினைகள் 
எத்தனை கருத்து வேறுபாடுகள் எதற்கும் இடம் கொடுக்காமல்

இணைந்து நாம்
வாழ்ந்ததினாலே 

இன்றளவும் நாம் 
உயிர் வாழ்கிறோம் 
யார் துணையும் 
இல்லாமலே

இதுவே 

இயற்கை நம்மைப்
பிரிக்காமல் 
இணையாக
அழைத்துக்கொண்டால் 

அதுவே 

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பிற்கு கிடைக்கும் 

வெகுமதியாகும்

கணவன் மனைவியின்  
காதலுக்கு கிடைத்த 

வெற்றியாகும்

தம்பிதுரை