Thursday, October 26, 2017

பேரன்

நெஞ்சில் மிதித்து
முகத்தில் உதைத்தும் கோபம் வராமல்
புன்னகை பூக்கவைத்த
புது உறவு பேரன்

அறிதலும் புரிதலும்
அதிகம் பெற்றவன்
கற்றவனுக்கு நிகராக
வித்தைகள் கற்றவன்

சொல்வதைக்
கேட்டு செய்வது
ஓர் அறிவு

செய்வதைப்
பார்த்துச் செய்வது
ஓர் அறிவு

ஒரு வயதில் 

இந்த அறிவு 

உண்மையில் பேரறிவு 

அடித்து உடைத்து
நொறுக்கிய பொருள்

 ஏராளம்

அசையா பொருள்களும்  
அசைந்தது அவனிடம்

இன்று
அசையும் பொருள்களும்

அசையும் உயிர்களும் கூட.

அசைவின்றி கிடக்குது
அவனின்றி வெற்றிடமாக

குவிந்த.உதடுகள்
கூறிய பார்வை
நீட்டும் விரல்கள்
சத்தமிட்ட குரல்

எல்லாம் இழந்து
வெறிச் சோடிப்போனது
எனது வீடு

கண்ணுக்குள் ஈரமானது 

நெஞ்சுக்குள் பாரமானது
                    தம்பிதுரை ...