Sunday, May 21, 2017

பெண் குழந்தை

பெண் குழந்தை

ஒருவன்
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் சொல்லுபவள்

வாழ்கின்ற வாழ்க்கையையே அர்த்தமாக்குபவள்

வசந்தத்தை நமக்குள்ளே வரவழைப்பவள்

பெண் குழந்தை
இல்லாத வீடு.
ஓர் பொட்டல் காடு

பருவத்தில்
மழை பொழிந்தால்
சிறு இலை தலைகளை
காணலாம்

பெண் குழந்தை
இருக்கும் வீடு
.அது பசுமை நிறைந்த
நந்தவனம்

பூக்கள் சிரிக்கும்
பூங்காவனம்

சோம்பேறியான
மனிதனைக்கூட
உழைக்கவைக்கும்
எந்திரம்

சோர்வடைந்து
மனம் தளர்ந்தால்

புத்துணர்வு பொங்கிவர. நீ
உச்சரிக்கும் மந்திரம்

தாய்க்கும் தந்தைக்கும்
நேசம் இனைப்பவள்

தாயோடும் தந்தையோடும்
பாசம் மிகுந்தவள்

முரட்டுத்தனமான
மனிதைக்கூட

மென்மையாக
மாற்றுபவள்

முள்ளையும்
மலர வைப்பவள்

பெண் குழந்தை
உள்ள வீடு .
ஓர் சிறு கோவில்

வெள்ளிக் கொலுசுகள்
அணிந்த கலைமகள்
ஓடியாடி
விளையாடும் திருமகள்

சந்தனம் மணக்கும்
மஞ்சள் மணக்கும்
மங்களகரமாக
வீடேயிருக்கும்

பண்டிகை என்று
வந்துவிட்டால்
வீட்டில் எங்கும் 
தீப ஒளிதான்

பெண் பிள்ளை
இருக்கும் வீட்டில்
நாள்தோறுமே
தீபாவளி தான்

மனம் தளர்ந்து
அமைதியிலக்கும்
வேளையிலே

மகள் முகம்
பார்த்து விட்டால்
புத்துணர்வு
பொங்கிவரும்
வாழ்வினிலே

நாத ஒலி
சலங்கை ஒலி
மங்களவாத்தியம்
இன்னிசை யாவும்

மகளின் இதழ் திறந்து
குயிலின் குரல் கலந்து
குழலின் இனிமையாக

அப்பா என்று
அழைக்கும்போது
அனைத்து இசையும்
காணாமல் போகும்

நாம் பிறந்த பிறவியின்
முழுப்பயனாக மாறும்

எத்தனை வறுமையில்
நான் இருந்தாலும்

எத்தனை செல்வம்
நான் பெற்றிருந்தாலும்

எனக்காக தனக்காக
கடைசி சொட்டு
கண்ணீர் சிந்தும்
என் பிள்ளை

அவளே பெண்பிள்ளை

பெண்பிள்ளை
பாசத்தின்
பெருமை கொள்ளும்
ஓர் தகப்பன்     ..தம்பிதுரை.......

Friday, May 5, 2017

தாய்

நான் பிறந்த போது
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

சிறுமியாக
சுற்றித் திரிந்ததும்

தாய் தந்தை
தோளில் தவழ்ந்ததும்

ஓடியாடி
விளையாடிய போதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

இனிப்புப் புளிப்பு
காரங்களை
சுவைத்தபோதும்

எத்தனயோ பழங்கள்
காய்கள் கடித்தபோதும்

இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

பள்ளியிலே
படித்த போதும்
பருவம் அடைந்த போதும்

ஆண் துனை
கிடைத்தபோதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை

உணவுக்கு
வழியில்லை
என்னை வறுமையும்
விடவில்லை

உழைக்கவும்
பயமில்லை
வயிற்றிலே
வளருது பிள்ளை

முன்னூறு நாள்
சுமந்தேன்
எத்தனையோ
இன்னல்களை
இடைவிடாது கடந்தேன்

முத்துப் போல் உன்னை 

முழுநிலவாய்
பெற்றெடுத்தேன்

மீண்டும் இந்த மண்ணிலே
நானே வந்து பிறந்ததாக
என்னி மகிழ்ந்தேன்

உன்னை
சுமக்கின்ற சுகமிருக்கே
அது சொர்க்கத்திலும்
கிடையாது

சொர்க்கமே
இதுதான் என்று
நான் சொன்னாலும்
புரியாது

உன்னை
தோளில் சுமக்கும்
இந்தத்‌ தருணம்
என் வாழ்வில்
கிடைத்த. உச்சசுகம்

பிறந்த பலனை
நான் அடைந்தேன்
அடுத்த பிறப்பு என்பதை
நான் மறந்தேன்

உறவு என்று
உன்னை சுமந்தேன்
என் உலகமும் சுகமும்
இதுவென மகிழ்ந்தேன் .
              ..தம்பிதுரை ...