Tuesday, December 27, 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கடடு
 மாடும் மனிதனும் ஒன்றாக
 இணைந்து உழைப்பவர்களே.

 அறுவடை காலம் முடிந்த பிறகு
 சோம்பல் இல்லாமல் 
 சுறு சுறுப்பாக இருக்க

. மாடும் மனிதனும்
 சுய பயிற்சி 
  எடுத்து கொள்ளவும்

 இருவருக்கும் 
இருக்கும் நட்பை
 மேலும் வளர்த்து 
 கொள்ளவும். 

 அடுத்த வருகின்ற தலைமுறையினர்
 மாட்டின் மேல் உள்ள 
 அச்சம் நீங்கி  
இணைந்து பழகவும்.

 உழைப்பையும் 
 வீரத்தையும் 
ஒருவர் மேலே ஒருவர்
 காட்டிக்கொள்ளும் 
  அன்பையும்.

 கொச்சை படுத்தி 
அசிங்கப்படுத்தி 
இந்த வீர விளையாட்டை 
 தடை செய்து. 

 ஒரு கலாச்சாரத்தின் அடையாளத்தையும்
 அழிக்க நினைப்பவர்கள்  யாராகிலும்
 அவர்களை வளரவிடக்கூடாது.

 நம் விளையாட்டு 
 நம் பாரம்பரியம்
 நம் நாகரிகம் 
 நம் கலாச்சாரம்
 நம் நட்புறவு 
 நம் பண்பாடுகளை
 நாம் தான் காத்துக் கொள்ளவேண்டும்.

 இதற்குக் கூட
 ஒன்று இனையாத தமிழர்கள்
 ஒற்றுமை இல்லாத மனிதர்கள்.

 தமிழர்கள் என்று
 சொல்லிக் கொள்வதிலோ
 தமிழர் திருநாள் என
 கொண்டாடி மகிழ்வதிலோ 
எந்த பலனும் எந்த பயனும்
 உள்ளதாக. உணரவில்லை

 வீரனை 
கோழையாக்கும்.
 கோழைகளின் 
 பொய் கூச்சலுக்கு.
 நாம் பயந்து வீரத்தை
 நாம் இழந்தால்.
 இழப்பு இன்று நமக்கல்ல
 வருங்கால நம் சமூகத்திற்கு

 நாகரிகம் என்ற பெயரில்
 நாம் நமது சாஸ்திரம்
 சம்பரதாயம்

 கலாச்சாரம் பண்பாடு
 கலை இலக்கியம் வீர விளையாட்டுகள்

கிராமியக்கலை  
கிராமத்து உணவு
இயற்கை மருத்துவம்

 உடல் ஆரோக்கியம் தரும்
 விளையாட்டுகள் 
என எல்லாவற்றையும் 
இழந்து மறந்து விட்டோம்

இனி இருப்பதையும்
 தொலைத்து விட்டு

 மீண்டும் ஒரு முறை
 சோம்பேறிகளாக 
அடிமைகளாக

 வாழ பழகிக் கொள்வோம்

 இது . தம்பிதுரையின்ஆதங்கம்

Monday, December 26, 2016

நாயக்கர் மஹால்

           நாயக்கர் மஹால்.

 இது ஓர் சமூகத்தின் அடையாளம்
இது ஓர் 
சமூகத்தின் அடையாளம்  

 இந்த சமுதாயத்தின் 
  ஒற்றுமை 

 முன்னோர்கள்  
 பலரின் உழைப்பு 

 வருங்கால சந்ததிகளின்  
 முதல்படி

ஓர் குடையின் கீழ்  
 ஓர் இனம் 

 ஒன்று கூடுகிறது  
 இன்றைய தினம் 

சிதறிய உறவுகளின்  
 சங்கமம் 

சேர்ந்து வாழவைக்கும்  
 இனச் சங்கம்

 ஒன்று கூடி செயலாற்றிய . 
 கடும் உழைப்புக்கு  
 கிடைத்த. மாவெற்றியே 

இது இன்று  
 சிறு துவக்கம் 

 இது நாளை  
 மிகச் சிறப்பாகும்

இது வருங்கால.
 இளைஞர்களை  
 வழிநடத்தும் 

 இன்றைய.
 பெரியோர்களின்  
 முயற்சியாகும் 

 இது  
 சமுதாய தொடர் ஓட்டம் 

அடுத்த சுற்றுக்களை  
 இளைஞர்கள் தொடரட்டும்

ஓடிக் களைக்கும் முன்பே . 
 நாம் வெற்றியின் 
 உச்சத்தை தொடவேண்டும்

 பாமரர் படித்தவர்  
 பாகுபாடில்லை 

 ஏழைகள் பணக்கார்கள்  
 ஏற்ற தாழ்வுயில்லை  

 இனப்பற்றும்  
 மனப்பற்றில்  
 என்றும் 

 வாழவேண்டும்  
 மன ஒற்றுமையில்

 வாழ்த்துக்கள்  
 பல கோடி 

 வாழ்த்துங்கள்  
 வாழ்த்துக்களை  
 கோடி கோடி
                    என்றும் அன்புடன் உங்கள்
                                             தம்பிதுரை